வீடொன்றில் திருடப்பட்ட 1,40,000 ரூபாய் பெறுமதியான தங்க வளையல், 40 அடி உயர தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞன் ஒருவரையும் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பதுளை, மெதபத்தனை பகுதியில் வீடொன்றில் யாரும் இல்லாதபோது ஜன்னலை உடைத்து உள் புகுந்து தங்க வளையல் ஒன்றையும், 37,000 ரூபாய் பணத்தையும் திருடிச்சென்றுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலொன்றிக்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 22 வயதுடைய இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளனர்.அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது திருடப்பட்ட பணத்தை தான் செலவிட்டதாகவும் தங்க வளையலை , தென்னை மரத்தின் உச்சியில் மறைத்து வைத்துள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் .
மேலும், இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர் .