எத்தியோப்பியாவில் வங்கிச் செயல்முறையில் ஏற்பட்ட கோளாறால் வாடிக்கையாளர்கள் பல மில்லியன் டொலர் தொகையை எடுத்துள்ளனர்.
நாட்டின் மிகப் பெரிய வங்கியான எத்தியோப்பிய வர்த்தக வங்கி பழுதுபார்க்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுடைய கணக்கில் உள்ள பணத்தைவிட அதிகமான தொகையை எடுக்க முடிந்தது. பரிவர்த்தனைகள் அனைத்தையும் முடக்குவதற்குச் சில மணி நேரம் எடுத்தது.
கோளாறு ஏற்பட்ட சமயத்தில் 40 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகை எடுக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் கூறின.
பணத்தை எடுத்தவர்கள் பெரும்பாலும் மாணவர்கள் என்று வங்கித் தலைவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழக மாணவர்கள் கோளாற்றைப் பற்றிய தகவலை சக மாணவர்களுக்குப் பரப்பியிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மாணவர்கள் பணத்தை எடுப்பதைத் தடுக்கக் பொலிஸார் வளாகங்களுக்கு அனுப்பப்பட்டனர். எடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்கும்படி பல்கலைக்கழக அதிகாரிகள் மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.