இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க கடமையேற்பு..!!

tubetamil
0

 இலங்கை வங்கியின் புதிய தலைவராக காவன் ரத்நாயக்க நேற்று உத்தியோகபூர்வமாக தமது கடமைகளை பொறுப்பேற்றார்.

காவன் ரத்நாயக்க ஜனாதிபதியின் ஆளணி பிரதானியும் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஆலோசகருமான முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் சகோதரராவார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இரசாயனவியல் பட்டதாரியான இவர், லேக் ஹவுஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமாவார்.

நிதி அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ள இந்த நியமனத்தை மத்திய வங்கி அங்கீகரித்துள்ளது.


இதற்கு முன்னர் இலங்கை வங்கியின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் பெரேரா பதவி வகித்ததுடன் நேற்று முன்தினம் (13) அவர் அந்த பதவியிலிருந்து விலகினார். இதையடுத்தே புதிய தலைவர் நேற்று கடமைகளை பொறுப்பேற்றார்.

காவன் ரத்நாயக்க, இதற்கு முன்னர் தேசிய அபிவிருத்தி வங்கி, துறைமுக அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றில் தலைவர் பதவி வகித்தவர். அத்துடன் லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தலைவராகவும் முகாமைத்துவ பணிப்பாளராகவும் இவர், பதவி வகித்துள்ளார். இவர் கார்கில்ஸ் சிலோன் பி எல் சி நிறுவனம் மற்றும் டயலொக் நிறுவனம் ஆகியவற்றிலும் முக்கிய பதவிகளை வகித்தவராவார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top