சனிக்கிழமை (09) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக மிஹிந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
அநுராதபுரம் - ரம்பேவ பிரதான வீதியில் ரம்பேவ புறநகர் பகுதியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
ரம்பேவ நகரில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு திரும்பிக்கொண்டிருந்த இளைஞர்கள் பயணித்த கெப் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரம்பேவ வன பிரதேசம் மற்றும் தம்பலகொல்லையில் வசிக்கும் 14, 19 மற்றும் 21 வயதுடைய மூவரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் படுகாயமடைந்த மேலும் மூவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்துக்குப் பிறகு, கெப் வண்டியின் சாரதி தப்பிச் சென்றார், மேலும் அவரைக் கண்டுபிடிக்க பல பொலிஸ் குழுக்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.