கல்வி மறுசீரமைப்புக்கான அடிப்படை நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படுமென, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
கல்வி நிர்வாகத்தினூடாக மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்த அமைச்சர், எதிர்காலத்தில் 01 முதல் 05 வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலைகள் ஆரம்பப் பாடசாலைகளாக வகைப்படுத்தப்படுமென்றார்.
இந்நிலையில் 06 முதல் 10 வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலைகள் கனிஷ்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளாகவும் 10 முதல் 13 வரையான வகுப்புகளை கொண்ட பாடசாலைகள் சிரேஷ்ட இரண்டாம் நிலைப் பாடசாலைகளாகவும் வகைப்படுத்தப்படுமெனவும், அமைச்சர் மேலும் தெரிவித்தார்.