புனித ரமழான் நோன்பு இன்று (12) ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.
ஹிஜ்ரி 1445 புனித ரமழான் மாத தலைப்பிறையை தீர்மானிக்கும் பிறைக்குழு மாநாடு நேற்று மாலை மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இதன்போது நாட்டின் பல பிரதேசங்களிலும் ரமழான் மாத தலைப்பிறை தென்பட்டதற்கான ஆதார பூர்வமான தகவல்கள் கிடைக்கப்பெற்றதற்கமைய இன்று ரமழான் நோன்பு ஆரம்பிப்பதாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவித்துள்ளது.