ஜனாதிபதி தேர்தலுக்கு நானே தகுதியானவன் ஜனக ரத்நாயக்க..!!

tubetamil
0

 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தகைமை எனக்கு உள்ளது என தேசிய சிவில் அமைப்பு முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரும், பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.

மேலும், என்னை விட தகைமையானவர் போட்டியிடுவதாக இருந்தால் நான் அவருக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும் கூறினார்.


தேசிய சிவில் அமைப்பு முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் வகையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நாட்டு மக்கள் முறைமை மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை'முறைமை பரிமாற்றத்தை' எதிர்பார்க்கிறார்கள்.பொருளாதார நெருக்கடிக்கு 75 ஆண்டுகால ஆட்சி முறைமை பொறுப்புக் கூற வேண்டும் என்று குறிப்பிட முடியாது. ஏனெனில் 75 ஆண்டுகால ஆட்சியில் எந்த அரசாங்கமும் நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளவில்லை.

2015 முதல் 2024 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்கள் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்புக் கூற வேண்டும். அரசியல்வாதிகளின் முட்டாள்தனமான தீர்மானங்களினால் நாடு வங்குரோத்து நிலையடைந்தது. 

வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்கு நடுத்தர மக்களை அரசாங்கம் வங்குரோத்து நிலைக்கு தள்ளியுள்ளது.

பொருளாதாரப் பாதிப்பில் இருந்து மீளும் நடவடிக்கைகளை செயற்படுத்தும் போது மக்களின் பசியை போக்கும் கொள்கையை நிலையாக செயற்படுத்துவோம்.இந்த ஆண்டு இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்கள் தீர்மானமிக்கது.நாட்டு மக்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து தீர்மானம் எடுக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் தலைமை எனக்கு உள்ளது.என்னை விட சிறந்த தகைமையானவர் ஒருவர் போட்டியிடுவதாக இருந்தால் அவருக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவேன் என்றார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top