பெரும்போக நெல் கொள்வனவிற்காக 1000 மில்லியன் ரூபா நிதி கிடைத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்தது.
திறைசேரியிலிருந்து 500 மில்லியன் ரூபாவும் விவசாயிகள் நம்பிக்கை நிதியத்திலிருந்து 500 மில்லியன் ரூபாவும் கிடைக்கப்பபெற்றுள்ளதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
பெரும்போக நெல் கொள்வனவிற்காக வேளாண்மை மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு களஞ்சிய சாலைகள் திறக்கப்பட்டுள்ளன
கடந்த ஐந்து நாட்களில் நெல் சந்தைப்படுத்தல் சபையினால் 9 லட்சத்து 4 ஆயிரத்து 202 கிலோ கிராம் நெல் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.இதற்காக, 95 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் 7 வலயங்களிலுள்ள 241 நெல் களஞ்சியசாலைகளை நெற்கொள்வனவிற்காக தாயார் நிலையில் வைத்துள்ளதாகவும் நெல் சந்தைப்படுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது.