முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று சட்டவிரோதமாக தேக்கு மரகுற்றிகளை கடத்த முற்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இன்று (09.03.2024) மாலை இடம்பெற்ற கடத்தல் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியில் பட்டா ரக வாகனத்தில் தேக்கு மரகுற்றிகளை கடத்துவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் செஞ்சோலை பகுதியில் வைத்து தேக்கு மரக்குற்றிகளை கடத்த பயன்படுத்தப்பட்ட பட்டாரக வாகனத்தினையும் , பட்டா ரக வாகனத்தின் சாரதியையும் கைது செய்துள்ளனர்.
13 தேக்கு மர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் நாளையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.