ஜனாதிபதி ரணிலுக்கு இன்று பிறந்த தினம்..!!

tubetamil
0

 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பிறந்த தினம் இன்று (மார்ச் 24) ஆகும். நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் 1948 இல் பிறந்த ரணில் விக்கிரமசிங்க கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.  


1977 ஆம் ஆண்டு பியகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றம் பிரவேசித்த ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் தொடர்ந்து 47 வருடங்களாக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். நாட்டில் 6 முறை பிரதமர் பதவியை வகித்து சாதனை படைத்த ஜனாதிபதி விக்ரமசிங்க, சவால்களை தைரியமாக ஏற்றுக்கொண்டார்.

’அரகலய’ போராட்டத்திற்குப் பிறகு, அனைத்துக் கட்சித் தலைவர்களும் நாட்டின் பிரதமர் பதவியை ஏற்கத் தயங்கியபோது, ​​அவர் நாட்டின் பொறுப்பை ஏற்றார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top