தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவிடம் இறுதி அறிக்கையை சமர்பிப்பதற்கான கால அவகாசத்தை அரசாங்கம் நீட்டித்துள்ளது.
அந்தக் குழுவின் பரிந்துரைகளை ஏப்ரல் 15ஆம் திகதிக்கு முன் அளிக்க வேண்டும் என்று முன்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் மேலும் இரண்டு மாதங்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஜூன் 15ம் திகதி அறிக்கை கையளிக்கவேண்டும்.