இலங்கை எரிபொருள் சந்தையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அத்தோடு நாளை (22) முதல் 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விற்பனை ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்த நிறுவனம் ஆசியாவில் தமது செயற்பாடுகளை இலங்கையிலிருந்து அகற்றி சிங்கப்பூரில் ஆரம்பித்து இன்று சிங்கப்பூரில் மாபெரும் நிறுவனமாக வளர்ச்சியடைந்துள்ளது.
63 வருடங்களின் பின்னர், ஷெல் நிறுவனம் இலங்கையின் எரிசக்தி துறையில் மீண்டும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.