தற்போதைய நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்துவிட்டு வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாகவே இந்த நடவடிக்கையை அவர்கள் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு இவர்கள் மூவரும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து முதல் தடவையாக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டவர்களாவர்.
மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருவதற்கான வாய்ப்பு குறைவடைந்தமை அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கான பிரதான காரணமாகும்.
எனினும் இதனிடையே, மூன்று எம்.பி.க்கள் நாட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உயர்பீட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த உத்திக பிரேமரத்ன தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி கனடாவில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.