பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கு, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர்.
அத்தோடு சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார்.
அங்கு, 500 மெகாவாட் வேக ஈனுலை மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
இதன் பின்னர், அங்கிருந்து நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.