யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி நிறுவன கட்டடம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
பருத்தித்துறை வீதியூடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த லொறி இன்று (07) காலை நல்லூர் ஆலயத்துக்கு முன்பாக உள்ள வளைவில் திரும்பும் போது அங்கிருந்த நிறுவனம் ஒன்றின் கட்டடத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.