வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்..!!

tubetamil
0

 கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று முன்னெடுத்திருந்தனர்.


தமது பிள்ளைகளின் எதிர்பார்ப்பினை முன்னிலைப்படுத்தி தொடர் போட்டம் ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் 2594 நாட்கள் நிறைவடைகின்ற நிலையில் குறித்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. 




கிளிநொச்சி A9வீதியில் ஆனந்தபுரத்தில் அமைந்துள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அலுவலகத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

பதாகைகளையும், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் படங்களையும் ஏந்தியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் உறவுகள் ஈடுபட்டனர். 

2009க்கு முன்னர் இராணுவத்தினரிடம் ஒப்படைத்த தமது உறவுகளை மீட்டுத்தர வலியுறுத்தி போராடிவரும் நிலையில் இதுவரையில் எவராலும் எந்த தீர்வும் பெற்றுத்தரப்படவில்லை.

இதனை வலியுறுத்தியும், கடந்த பன்னிரண்டாம் தேதி மனித உரிமை பேரவையில் நடைபெற்ற இலங்கை தொடர்பான விவாதத்திலும் தாம் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலைமைகள்  தொடர்பாக 08 மாவட்டங்களில் சேர்ந்த உறுப்பினர்கள் மனித உரிமை பேரவையிலும் தமக்கான உரிய தீர்வினை பெற்று தர வேண்டுமென வலியுறுத்தி கலந்து கொண்ட நிலையிலும் எமக்கு நியாயமான தீர்வு இல்லை எனவும் தெரிவித்தனர். 

தற்பொழுது வயது முதிர்ந்த முடியாத நிலையிலும் இறுதி காலத்திலாவது தமது உறவுகளை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென ஆவலாக உள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top