சமையல் எரிவாயு விலை குறித்து வெளியான அறிவிப்பு..!

keerthi
0


லிட்ரோ நிறுவனத்தின் உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதாந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் மார்ச் மாதத்துக்கான விலையில் மாற்றங்களை ஏற்படுத்தப் போவதில்லை என அந்நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் பெப்ரவரி மாதத்திலும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் திருத்தம் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளது.

பொதுமக்கள் எதிர்கொள்ளும் நிதிச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை ஜனவரியில் அறிவிக்கப்பட்ட விலை உயர்வையடுத்து, தற்போதுள்ள லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் இவ்வாறாக அமைந்துள்ளன.

12.5 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 4,250 ரூபாயாகவும், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 1,707 ரூபாயாகவும் 2.3 கிலோ கிராம் சிலிண்டரின் விலை 795 ரூபாயாகவும் அறவிடப்படுகின்றன.

இந்நிலையில், இம்முறை லாப் சமையல் எரிவாயு விலையை அதிகரிக்கவில்லையென லாப் நிறுவனத்தின் நிறைவேற்று குழு அதிகாரி கலாநிதி நிரோஷன் ஜே பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.


உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது எரிவாயு விலை அதிகரிக்கப்பட வேண்டியிருந்தாலும் இம்மாதத்தில் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

  எனினும்   தற்போதைய விலையின் அடிப்படையிலேயே சமையல் எரிவாயுவை விற்பனை செய்ய லாப் நிறுவனம் தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், முன்பிருந்த விலையிலேயே லாப் சமையல் எரிவாயுவை கொள்வனவு செய்ய முடியுமென்றும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top