சம்பளம் கோரி பலுகிஸ்தான் பல்கலைக்கழக ஊழியர்கள் குவெட்டாவில் போராட்டம்..!!

tubetamil
0

 பலுகிஸ்தான் பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக் குழு (JAC) குவெட்டாவில் போராட்டமொன்றை ஏற்பாடு செய்தது. கடந்த வரவுசெலவுத் திட்டத்தில் உறுதியளித்தவாறு ஆராய்ச்சி மையங்களில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு மூன்று மாத காலதாமத சம்பளம் மற்றும் 35 சதவீத சம்பள உயர்வு ஆகியவற்றைக் கோரி போராட்டம் நடத்தியதாக பலுகிஸ்தான் போஸ்ட் தெரிவித்துள்ளது.


பலுகிஸ்தான் பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், குவெட்டா ஊடக மையத்தில் ஒன்று கூடி நிதி நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண அழைப்பு விடுத்தனர்.

சிவில் செயலகம், ஹாக்கி சந்தைப்பகுதி, ஆணையாளர் அலுவலகம், கச்சேரி பிரதேசம் ஜின்னா வீதி மற்றும் மனன் பகுதி உள்ளிட்ட குவெட்டாவின் முக்கிய பகுதிகள் வழியாகச் பயணித்த ஆர்ப்பாட்டம் குவெட்டா ஊடக மையத்தின் முன் முடிவடைந்ததாக தி பலுகிஸ்தான் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

பேராசிரியர் கலீம் உல்லா பரேச் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஷா அலி புக்டி, நசீர் அகமது லெஹ்ரி, முஹம்மது இசா ரோஷன், சமத் பலோச், நாசர் மெங்கல், பலுசிஸ்தான் தொழிலாளர் சம்மேளனத்தின் அபித் பட், பரீத் கான் அச்சாக்சாய், பர்ஹான உமர் மக்சி உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலர் பங்கேற்றனர்.

மேலும், ரமழானின் போது ஓய்வூதியத்திற்காக பல்கலைக்கழைக ஊழியர்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டமை குறித்து அவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

பலுகிஸ்தான் மற்றும் மத்திய அரசாங்கம் மற்றும் பாகிஸ்தானின் உயர் கல்வி ஆணைக்குழு என்பன பலுகிஸ்தான் பல்கலைக்கழக நிதிநெருக்கடியைத் தீர்ப்பதில் எடுத்த நடவடிக்கையின் குறைபாடுகளையும் அவர்கள் விமர்சித்தனர்.

இதைத் தொடர்ந்து,நோன்பு காலத்தில் ஊழியர்களின் குடும்பங்கள் பட்டினி நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

பலுகிஸ்தான் பல்கலைக்கழக துணைவேந்தரின் ‘சட்டவிரோத’ நியமனத்தையும் போராட்டக்காரர்கள் கண்டித்தனர். திறமையற்ற மற்றும் பல்கலைக்கழகத்தின் நலனுக்கு கேடு விளைவிப்பவர் என்றும் அவரை விமர்சித்தனர்.

அரசாங்கத்திடம் இருந்து போதிய நிதி உதவிக்காக குரல்கொடுக்குமாறு ஏனைய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் அதிகாரிகளை அவர்கள் வலியுறுத்தினர்.

பல்கலைக்கழக ஊழியர்களின் இக்கட்டான சூழ்நிலையை ஆதரிக்கவும், விரிவுபடுத்தவும் ஒத்துழைக்குமாறு ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் கட்சிகள், மாணவர் குழுக்கள், சட்ட சமூகம் மற்றும் சிவில் சமூகத்தின் உறுப்பினர்களுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்தனர்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top