இணைய தளத்தைப் (ஒன்லைன்) பயன்படுத்தி நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த சீன கும்பலொன்றின் பங்களாதேஷ் இணைப்பாளர்கள் மூவர் டாக்கா புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாக்கா விமான நிலையப் பகுதியில் இருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பெருநகர மேலதிக பொலிஸ் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவில் கல்வி பயிலும் பங்களாதேஷைச் சேர்ந்த மாணவர்கள் இம்மோசடி நடவடிக்கைகளுக்கு சீன மோசடிக் கும்பல் ஒன்றினால் பயன்படுத்தப்பட்டிருப்பது ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்த மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 30 இந்திய சிம் அட்டைகளும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.