ஆளைக் கொன்றது அக்குபஞ்சர்..!!

tubetamil
0

 யாழ் அச்சுவேலி கிழக்கு பகுதியில் அக்குபஞ்சர் சிகிச்சை பெற்றுக்கொண்ட  மாணிக்கம் சற்குணராஜா (வயது 64) என்பவர் உயிரிழந்துள்ளார். 

முழங்கால் வலியினால் அவதிப்பட்டு வந்தவர் யாழ்.நகர் பகுதியை அண்மித்த பிறவுண் வீதியில் அக்குபஞ்சர் சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வரும் சிகிச்சை நிலையத்திற்கு  சமூக வலைத்தளங்களில் வந்த விளம்பரங்களை நம்பி சிகிச்சைக்காக சென்றுள்ளார். 


அங்கு முழங்கால் வலிகளை போக்குவதாக முழங்கால்களில் ஊசிகளை குத்தி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. 

சிகிச்சையின் பின்னர் கடுமையான வலிகள் ஏற்பட்டமையால் , யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

உடற்கூற்று பரிசோதனையின் போது , அக்குபஞ்சர் சிகிச்சை என தவறான முறைகளில் செலுத்தப்பட்ட ஊசிகள் மூலம் கிருமி தொற்றுக்கள் ஏற்பட்டு , அவை உடல் முழுவதும் பரவியதால் மரணம் சம்பவித்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. 

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top