ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்... மைத்திரி இன்று CID க்கு...!

keerthi
0


நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்த கருத்து தென்னிலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ள நிலையில், இது  குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்றையதினம்(25) முன்னிலையாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மைத்திரி வெளியிட்ட கருத்து தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்,

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரியை அறிந்துள்ள மைத்திரிபாலவை உடனடியாக பொலிஸார் அணுக வேண்டும் எனவும் அதேவேளை, நீதிமன்றம் கேட்டால் தான் உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரி பற்றிய தகவல்களை தருவேன் எனவும், அந்த தகவல்களை நீதிபதிகள் இரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூறும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், மூளையை பரிசோதனை செய்ய வேண்டும்  எனவும்  தெரிவித்துள்ளார்.

அதேவேளை பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

பயங்கரவாதம், அரசுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் தகவல் தெரிந்தும் அதை மறைப்பது 10 வருடகால சிறைத்தண்டனைக்குரிய குற்றமாகும். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகுவிரைவில் வெலிக்கடை சிறைச்சாலைக்கு செல்வார் எனவும் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் கருத்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பல தடவை நீதிமன்றம் சென்ற முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் குற்றவாளிகளை சட்டத்தின் தண்டனையில் இருந்து தப்பிக்க உதவி புரிந்துள்ளார். 

இது தேசத்துரோக குற்றமாகும். அவரை குற்றவியல் சட்டத்தில் கைது செய்து நீதிமன்றில் முன்னிறுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கையில் தற்போது தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் மைத்திரியின் கருத்து தற்போது நாடு முழுவதும் பேசும் பொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top