OMP கிளிநொச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை உல்லாசம் - உத்தியோகத்தரும், பெண்ணொருவரும் பொலிஸ் விசாரணையின் பின் விடுதலை..!!

tubetamil
0

 OMP கிளிநொச்சி அலுவலகத்தினை திறந்து சனிக்கிழமையன்று உல்லாசம்  உத்தியோகத்தரும் பெண்ணொருவரும் பொலிஸ் விசாரணையின் பின் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் அமைந்துள்ள OMP அலுவலகம் சனிக்கிழமையான இன்றைய தினம் திறக்கப்பட்டு இருவர் உள்ளே சென்றுள்ளனர்.



குறித்த அலுவலகத்தின் குளியளறையும் பாவிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து கழிவு நீர் வெளியேறியதை அவதானித்தவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அலுவலகத்தை திறக்குமாறு பணித்துள்ளனர். இந்த நிலையில் அங்கிருந்து வெளியே வந்த குறித்த ஆண் உத்தியோகத்தர் தன்னை அடையாளப்படுத்தியுள்ளார்.

வேறு நபர்கள் இருக்கின்றார்களா என அந்த உத்தியோகத்தரிடம் பொலிசார் வினவியபோது, தனது நண்பர் இருப்பதாக கூறியுள்ளார். 

குறித்த அறையை சோதனையிட்ட பெண் பொலிசார், அங்கு பெண் ஒருவர் இருப்பதை அவதானித்து அவரிடம் வினவினர். 

குறித்த அலுவலகத்தை தானே பராமரிப்பதாகவும், மாலை நேரங்களில் ஓய்வு பெறுவதற்காக இங்கு வருவதாகவும் தெரிவித்த அவர், அந்த பெண் மலசலகூடத்தை பயன்படுத்தவே வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

குறித்த பெண்ணின் அடையாள அட்டையை பரிசோதித்த பொலிசார் 18 வயதை கடந்த பெண் என்பதை உறுதிப்படுத்தினர். ஆனாலும், சனிக்கிழமையில் அலுவலகத்தினை பயன்படுத்தியமை தொடர்பில் பொலிஸ் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த ஆண் உத்தியோகத்தர் கிளிநொச்சி நகரில் உள்ள பிரபல தனியார் கல்வி நிலையம் ஒன்றில் பிரதான பாடம் ஒன்றை கற்பித்து வருகிறார். குறித்த பெண்ணும் அக்கல்வி நிலையத்தில் கல்வி கற்று வந்தவர் எனவும் தெரிய வந்துள்ளது.

தனியார் கல்வி நிலையங்களுக்கு பெண் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர் தமது பிள்ளைகள் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என பொலிசார் அறிவுறுத்துகின்றனர்.

குறித்த OMP அலுவலகம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நிறண்விருத்தி மண்டபம் மற்றும் அரச சுற்றுலாவிடுதி ஆசிய பகுதிகள் அமைத்துள்ள வளாகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top