எதிர்வரும் ஏப்ரல் 15 ஆம் திகதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வங்கி மற்றும் வணிக விடுமுறை என்று பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண அமைச்சகம் வரையறுக்காததால் மக்கள் குழப்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் விடுமுறை தொடர்பில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலில் பொது விடுமுறை என்று மாத்திரமே கூறப்பட்டுள்ளது.
இதனால் அன்றைய தினம் வங்கி(Bank) மற்றும் வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமா என்ற குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, 15 ஆம் திகதி விடுமுறை தொடர்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.