யாழ்ப்பாணத்தின் (jaffna)புறநகர் பகுதியில் இரண்டு வன்முறை கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 22 பேர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 பேர் ஒரே நேரத்தில் வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டமையால், வைத்தியர்கள் நெருக்கடிகளை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடன் உதவிக்கு வந்தவர்களுக்கு இடையில் மோதல் போக்கு காணப்பட்டதுடன் குறித்த தரப்பினர் வைத்தியசாலைக்குள்ளும் மோதலில் ஈடுபட முயற்சித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சம்பவம் தொடர்பில் யாழ் காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, தற்போது சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அண்மை காலங்களில் யாழில் அதிகமான வாள்வெட்டு சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.