களுத்துறை - மொரகஹஹேன, தல்கஹாவில பிரதேசத்தில் வெள்ளை நிற காரில் வந்த குழுவினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் இச் சம்பவம் இன்று (07) பகல் இடம்பெற்றுள்ளது
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னணி மற்றும் சந்தேக நபர்களை கைது செய்வதற்காக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.