தொழில் முனைவோர் கலாசாரத்தை (Entrepreneur Culture) வளர்த்தல் , பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்தலின் நகர்வாக, கைத்தொழில் அபிவிருத்திச் சபை, தொழில் முயற்சியில் ஆலோசகர்களைப் பயிற்றுவிக்க உள்ளது.இதற்கான ஒரு புதிய திட்டத்தையும் அபிவிருத்திச் சபை ஆரம்பித்துள்ளது. ஏற்றுமதி சார்ந்த உற்பத்திப் பொருளாதாரம் மூலம் உலக சந்தையில் நாட்டின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இரத்மலானையில் உள்ள நீர் மற்றும் சுகாதாரத்திற்கான சிறப்பு மையத்தில் ( Centre of Excellence for Water and Sanitation(CEWAS) நடைபெற்ற சான்றிதழ் வழங்கும் நிகழ்வின் போது, இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையின் தலைவர் வைத்தியர் சாரங்க அலகப்பெரும இத்திட்டத்தை வெளியிட்டார். ஏற்கனவே உள்ள மற்றும் ஆர்வமுள்ள தொழில் முயற்சியாளர்களை வளர்ப்பதிலும் வழிகாட்டுவதிலும் பயிற்சி பெற்ற ஆலோசகர்களின் முக்கிய பங்கை, வைத்தியர் அலகப்பெரும இங்கு வலியுறுத்தினார்.
தொழில்முனைவோர் ஆலோசகர்களை பயிற்றுவிக்க புதிய பயிற்சித் திட்டம்..!!
April 01, 2024
0
Tags
Share to other apps