கேரள கஞ்சாவுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட கலால் அதிகாரிகளை பணி இடைநீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விசேட விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் நிதி இராஜாங்க அமைச்சர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், விசாரணைகளின் பின்னர், இந்தச் செயலில் ஈடுபட்டுள்ள அனைத்து அதிகாரிகளுக்கும், தரம் பாராமல் சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.