கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியில் மதுபோதையில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் சென்ற குழுவினர் வீடு ஒன்றினை தாக்கியுள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்றிரவு (12) 11மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.