வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,,
இன்று பாடசாலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுவனின் முகத்திலும் தலையிலும் அடிகாயங்கள் காணப்பட்டதை அடுத்து பெற்றோர் சிறுவனிடம் விசாரித்ததில் அவரது ஆசிரியை தாக்கியதாக தெரிவித்துள்ளான்
இதனை தொடர்ந்து சிறுவனின் தந்தை குறித்த ஆசிரியருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சிறுவனை தாக்கியதற்கான காரணம் என்ன மற்றும் காலிற்கு கீழ் அடித்து இருக்கலாமே என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதில் அளித்த ஆசிரியை “உங்கள் மகனுக்கு அ,ஆ தெரியவில்லை என்றும் அதனாலேயே அடித்தது என்றும் அடிக்கும் போது சிறுவன் அங்கும் இங்கும் ஓடியதால் முகத்தில் அடிபட்டுவிட்டது என்று கூறியதுடன் இதனை கேள்வி கேட்கும் நீங்கள் நாளையுடன் பிள்ளையை வந்து கூட்டி சென்றுவிடுங்கள் என்று எந்தவித குற்ற உணர்ச்சியும் இன்றி பதில் அளித்துள்ளார்
எனினும் இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுவன் நோயாளர் காவு வண்டிமூலம் வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் சிறுவனின் நெற்றியில் காயமும் தலை மற்றும் கண் பாதிப்படைந்துள்ளதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்
மேலும் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியின் விசாரனைக்கும் உட்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.