தனியார் பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி வகுப்புகள் மூலம் சம்பாதிக்கும் உண்மையான வருமானத்தைக் கண்டறிய கிராம அதிகாரிகளின் உதவியுடன் ஒரு பொறிமுறையைத் தயாரிக்க வழிகள் மற்றும் வழிமுறைகளுக்கான குழு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
அத்தோடு இந்த நிறுவனங்கள் தவிர, சுகாதார சேவை மையங்கள், தனியார் மருத்துவமனைகள், சர்வேயர்கள், பொறியாளர்கள், சட்ட நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி மற்றும் வானொலி சேவைகளுக்கும் இந்த பொறிமுறையை அமுல்படுத்த வேண்டும் என்று குழுவின் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிறுவனங்கள் ஈட்டும் உண்மையான வருமானம் பற்றிய துல்லியமான தகவல்களைப் பெறுவது சவாலாக இருக்கலாம், ஆனால் கிராம அதிகாரிகளின் உதவியுடன் கேள்வித்தாள் மூலம் அந்தத் தகவல்களைப் பெற முடியும் என்று கடந்த நாள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதற்காக மொபைல் அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம் என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க சமர்பித்தார்.