மேல், வடமேல், வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் வெப்பநிலை கடுமையாக இருக்குமென ‘ இயற்கை அபாயங்கள் முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. மேல், வடமேல் வடமத்திய, வடக்கு மற்றும் தென் மாகாணங்கள் மற்றும் இரத்தினபுரியின் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ‘எச்சரிக்கை நிலை’ வரை வெப்பம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இயற்கை அபாயங்கள் ஆரம்ப மையம் எச்சரித்துள்ளது.