யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
எனினும் குறித்த சம்பவமானது நேற்று(31)இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு வாள்களுடன் சென்ற குழு ஒன்று பருத்தித்துறை தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் உள்ள நபர் ஒருவர் மீது வாளால் வெட்டி தாக்கியுள்ளனர்.
இதனையடுத்து வாளால் வெட்டியபோது கீழே வீழ்ந்த கை துண்டையும் எடுத்துச் சென்றுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச் சம்பவத்தில் கையை இழந்தவர் செல்வநாயகம் செந்தூரன் எனும் 30 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஆவார்.
அத்தோடு வாள் வெட்டுக்கு இலக்கான நபர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதானா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறுஇருக்கையில் கடந்த (11) யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.