மக்கள் ஆணையில்லாத பாராளுமன்றம் கலைக்கப்பட்டு விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென, பாரளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார். சட்டவாக்கத்துறை, நிறைவேற்றுத்துறை என்பன தற்போது,மக்கள் ஆணையில்லாதவர் களால் கையாளப்படுகின்றன.எனவே, காலம் தாழ்த்தாமல் உரிய தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.போலிப் பெரும்பான்மை மூலம் தேர்தல்களை பிற்போடும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின், மக்கள் போராட்டம் வெடிக்கும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.