கலங்குட்டிவ ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளார் என மெகலேவ பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
லிகொலவெவ, சியம்பலங்காமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் ஆற்றில் நீராடச் சென்ற போதே இச்சம்பவம் நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் முதலையிடமிருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் சேர்த்த போதும் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.