மட்டக்குளிய - இக்பாவத்தை பகுதியில் சுற்றுலா சென்ற தனியார் பேருந்தொன்று இன்று அதிகாலை திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரியவருகின்றது.
எனினும் குறித்த பேருந்தின் சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் வீதியில் பேருந்தினை நிறுத்திவிட்டு தேநீர் அருந்த சென்ற போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கண்டி நோக்கிச்சென்ற சுற்றுலா பேருந்தே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளதாகவும், இதன்போது பேருந்தில் யாரும் இருக்கவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இவ்வாறுஇருக்கையில், தீ விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.