இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பண கூட்டத்தில் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பன்மூர் தமிழ் மகா வித்தியாலய உயர்தர மாணவி K.சுதர்சனா கலந்து கொண்டு பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற இலங்கையின் முதலாவது மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பண கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார்.
இவர் பன்மூர் தமிழ் மகா வித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று பிரதமராக தெரிவு செய்யப்பட்டார். அதன்பின்னர் வலய மட்டத்தில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
அதன் பின்னர் மாகாண மட்ட ரீதியில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு கல்வி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இறுதியாக தேசிய ரீதியில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்றத் தேர்தலில் உறுப்பினராக அங்கத்துவம் பெற்று கடந்த வாரம் இலங்கை பாராளுமன்றத்தில் நடைபெற்ற மாணவர் பாராளுமன்ற அங்குரார்ப்பண கூட்டத்தில் கலந்துகொண்டு பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.