தென்னாபிரிக்காவில் இருந்து இலங்கைக்கு விமான அஞ்சல் மூலம் அனுப்பப்பட்ட கொக்கைன் பொதியை பெற்றுக்கொள்ள வந்த ஒருவர் உட்பட மூவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் பொல்கொடவத்தை விநியோக நிலையத்திற்கு வந்த நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொரளை பிரதேசத்தை சேர்ந்த இருபத்தைந்து வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.
இவ் சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, இலங்கைக்கு கொக்கைன் போதைப்பொருளை இறக்குமதி செய்வதற்கு உதவிய மேலும் இரு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.