கோவில் ஒன்றில் வழங்கப்பட்ட அன்னதானம் ஒவ்வாமை காரணமாக நூற்றுக்கு மேற்பட்டோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நல்லதண்ணி பொலிஸ் பிரிவிலுள்ள லக்சபான தோட்ட வாழமலை பிரிவில் தோட்ட ஆலய திருவிழா இடம்பெறும் வேலையில் பக்தர்களுக்கு வழங்க பட்ட அன்னதானம் ஒவ்வாமை காரணமாக இன்று மாலை முதல் நூற்றுக்கு மேற்பட்ட நோயாளிகள் தனியார் பேருந்துகள் மூலம் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து நோயாளிகள் வருகை காரணமாக வைத்திய சாலையில் அனைத்து பகுதியினரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு வைத்திய சாலையில் இல்லாமல் உள்ள மருந்துகள் தனியார் மருந்தகங்களில் பெற்று செல்வதை காணக் கூடியதாக உள்ளது.