வற் வரி, சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரிக்கான வருடாந்த வருமான வரம்பு 80 மில்லியன் ரூபா, தற்போது 60 மில்லியன் ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 60,000 ரூபா வருமானம் ஈட்டும் நாட்டிலுள்ள பெருமளவிலான வர்த்தகர்கள், வரிக் கோப்புகளைத் திறக்க வேண்டிய நிலை ஏற்படும்.
தற்போது இறைவரித் திணைக்களத்தில் 12,000 முதல் 13,000 வரையிலான வற் வரி கோப்புகள் உள்ளன.இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 50,000 த்தை தாண்டுமென்றும் அரசாங்க வருமான வரித்துறை ஊகித்துள்ளது.
இந்நிலையில் 60 மில்லியன் ரூபா வருடாந்த வருமானம் ஈட்டும் அனைத்து நபர்களும் வரி செலுத்துவதற்கு உள்நாட்டு இறைவரி திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்கப் பட்டுள்ளது.