சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநராக கிறிஸ்டலினா ஜோர்ஜீவா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும் தற்போது, IMF இன் நிர்வாக இயக்குநராக உள்ள அவர், இரண்டாவது முறையாகவும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
அதாவது சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதுடன், இந்த நியமனம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரவுள்ளது.
அத்தோடு பதவிக்காலமும் ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.