இலங்கையில் மூலப்பொருட்களின் விலை உயர்வினால், புத்தாண்டு காலத்தில் பலகாரங்கள் உள்ளிட்ட இனிப்பு வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிரசம் 60 முதல் 80 ரூபாய் வரையிலும், கொண்ட கெவும் 70 முதல் 100 ரூபாய் வரையிலும், ஆஸ்மி 120 முதல் 150 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை கேக் துண்டு ஒன்றின் விலையும் 40 முதல் 60 ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆனால், பல்பொருள் அங்காடிகளில் இந்த இனிப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இந்த ஆண்டு இனிப்பு வகைகளின் விலை உயர்வு காரணமாக இனிப்புகளுக்கான தேவை குறைந்துள்ளதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு கேக் விலை உயர்வால் கேக்கிற்கான தேவையும் குறைந்துள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு கிலோ பட்டர் கேக் 1500 முதல் 1800 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
மாஜரீன் போன்றவற்றின் விலை உயர்வால் கேக் விலையை உயர்த்த வேண்டியுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.