நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துகிறது என இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொருளாதாரம் தொடர்பாக, பல்வேறு நபர்கள் சில விடயங்களை குறிப்பிட்டு, பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். ஆனால் அவைகள் நியாயமானவைகள் அல்ல என்பது நாட்டு மக்களுக்கு நிரூபிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தலைமைத்துவத்தைப் பாராட்ட வேண்டும்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு மிகவும் திறமையான மற்றும் பொருத்தமான தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க என்பதை இதுவரை அடைந்துள்ள முன்னேற்றம் உறுதிப்படுத்துகிறது. பொருளாதார நெருக்கடியை மிகவும் திறமையாக சமாளித்தார். எனவே, அவரது தலைமை தொடர்ந்தும் நாட்டுக்குத் தேவை என்றார்.