யாழ்ப்பாணம் - தாவடி பகுதியில் தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாவடி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2ஆம் திகதி மேற்படி இளைஞரின் தந்தைக்கும் அவரது சகோதரியின் கணவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது
மோதல் கைகலப்பாக மாறிய போது அதனை தடுக்க சென்ற இளைஞர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.