காணி ஏல விற்பனையாளர்களுக்கு கடுமையாகும் கட்டுப்பாடுகள் - இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு

keerthi
0


 காணி ஏல விற்பனையாளர்கள் காணிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு தெரிவிக்காமல் வங்கிகளில் அடமானம் வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக பொது கணக்கு குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர், அதற்கான சட்டரீதியான தீர்வொன்றின் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தனகல்லையில் முந்நூறு காணிகள் ஏலத்தில் விடப்பட்டமை தொடர்பிலும், ஏலதாரர்கள் அடமானம் வைத்த காணியை  மீட்காத காரணத்தினால் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்     இது தொடர்பில் கடுமையான கட்டுப்பாடு தேவை எனவும்,

உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அதிக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்பட வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

  அத்தோடு   ஏலம் விடப்பட்ட நிலத்தை வங்கிகளில் அடமானம் வைக்க முடியாது என்ற நிலை உள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top