லோகேஷ் கனகராஜ் - கார்த்தி கூட்டணியில் உருவாகி 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கைதி . இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தனர்.
2019ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த இப்படம் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதை தொடர்ந்து கைதி 2 படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், லோகேஷ் கனகராஜின் அடுத்தடுத்த கமிட்மெண்ட்ஸ் காரணமாக கைதி 2 படம் தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது. மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை LCU-வில் இணைந்துள்ளனர்.
அடுத்த ஆண்டு துவங்கவுள்ள கைதி 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், கைதி 2 திரைப்படம் LCU-வில் இணைந்து இருப்பதன் காரணமாக கமல் இப்படத்தில் வருவார் என கூறப்படுகிறது.
அதற்கு கமல் ஓகே என கூறிவிட்டாராம். ஆனால் விஜய் இப்படத்தில் நடிக்கமாட்டார் என்கின்றனர். அதற்கு பதிலாக அவருடைய குரல் இப்படத்தில் இருக்கும் என பிரபல பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.