கமல் ஹாசனின் இந்தியன் 2 திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த வாரம் வெளிவந்தது. ஆனால், எதிர்பார்த்த வரவேற்பை அப்படம் பெறவில்லை.
ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமலுடன் இணைந்து சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, ஜெகன், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.
படத்தின் நீளம் காரணமாக சற்று பின்னடைவை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. மக்களின் கருத்தாக இது இருந்தபட்சத்தில், படத்திலிருந்து 11 நிமிட காட்சிகள் குறைக்கப்பட்டு, புதிய வெர்ஷன் ஆஃப் இந்தியன் 2 திரையிடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படம் உலகளவில் கடந்த 8 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.