எண்ணெய்க்கான வரிசை, எரிவாயுவுக்கான வரிசை, மருந்துப் பொருட்களுக்கான வரிசை என்பனவற்றை ஒழித்து மின்வெட்டை ஒழித்து, ஒரு டொலர் 400 ரூபாய் என்றிருந்த நிலையை மாற்றியது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவேஎன்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
எங்களால் கடனை அடைக்க முடியவில்லை என்று சொன்னதும், உலகம் முழுவதில் இருந்தும் ஒதுக்கித் தள்ளப்பட்டோம். எமக்கு கடன் தர உலகம் அஞ்சியது.
கடனை மறுசீரமைக்க உலக நாடுகள் ஒப்புக்கொண்டதையடுத்து மீண்டும் சர்வதேச அங்கீகாரம் எங்களுக்கு கிடைத்தது. நாம் நிம்மதிப் பெருமூச்சுவிடும் இன்றைய சூழலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கினார் என்பதை மறந்துவிடாதீர்கள்.
எண்ணெய், எரிவாயு மற்றும் உணவு உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய டொலர்கள் தேவை. எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல்கள் கடலில் நங்கூரமிடும் வரை இவை அனைத்தும் நாட்டு மக்களின் அடிப்படை தேவைகள்.
இன்னும் சில ஆண்டுகளுக்குப் பின்னர் பிற்போடப்பட்டுள்ள இந்த வெளிநாட்டுக் கடன் மீள் செலுத்துகைக்கு நாங்கள் பொறுப்பாவோம்.
அதன் காரணமாக நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் IMF என்ற பெயரில் டொலர்களை சம்பாதிக்கும் டொலர் இயந்திரம் நம் நாட்டிற்கு தேவைப்படுகிறது. அதற்கு முதிர்ச்சியும் அனுபவமும் மட்டுமன்றி சர்வதேச அங்கீகாரமும் கொண்ட தலைவர் நாட்டிற்குத் தேவை. அதற்கு ரணில் விக்ரமசிங்க மட்டுமே அதற்கான சிறந்த தெரிவு.
நாட்டு மக்களை ஏமாற்றிவிட்டு சர்வதேசத்தை ஏமாற்றுவது இலகுவானதல்ல. இதற்கு முன்னர் 16 தடவைகள் கடன் பெற்று சர்வதேசத்தை ஏமாற்றப் போய் இறுதியாக நாமே ஏமாற்றப்பட்டோம்.
அவர்கள் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் உலகம் ஏற்றுக்கொண்ட கொள்கைகளுடன் செயல்படும் தலைவர்களுடன் பயணிக்கவே விரும்புகிறார்கள், பொய்யான பாசாங்குகளை பரப்பும் தற்பெருமைக்காரர்களுடன் அல்ல. சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்ற ஒரே அரசியல்வாதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.