ரஜரட்ட பல்கலைக்கழகம் பெருங்காயம் சேர்க்கப்பட்ட புதிய வகை சவர்க்காரம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சவர்காரமானது சந்தையில் உள்ள ஏனை சவர்க்காரங்களை விட தரம் வாய்ந்ததாக இருக்கும் என ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வணிக ஒருங்கிணைப்பு பகுதியினர் குறிப்பிட்டுள்ளனர்.
இயற்கை பெருங்காய சாருடன் TFM மதிப்பு 76 சதவீதமும், 80 சதவீதமும் இருக்கும் வகையில் இந்த சவர்க்காரம் தயாரிக்கப்பட்டுள்ளதாக ரஜரட்டை பல்கலைக்கழகத்தின் ஆய்வுக் குழுவைச் சேர்ந்த கலாநிதி ஆஷா விஜயகுணவர்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன், வணிக ஒருங்கிணைப்புப் பிரிவின் ஸ்தாபக இயக்குநராக இருந்த பேராசிரியர் சஞ்சீவனி கிங்கத்தர பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட பின்னர் இதற்குத் தேவையான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளார்.