யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டார அவர்களுக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்க பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும் இனைந்து வட்டு கோட்டை பொலிஸ் பிரிவு சுழிபுரம் மத்தி பரளாய் வீதி பகுதியில் பெண் ஒருவர் தொடர்ச்சியாக கசிப்பு வியாபாரம் செய்வதாக ஊர் மக்கள் விசனம் தெரிவித்த வேலையில் இன்று யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவினரும் யாழ் மாவட்ட புலனாய்வு பிரிவினர் இனைந்து குறித்த பெண்ணை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 10போத்தல் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பெண்ணையும் சான்று பொருளையும்
வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தியுள்ளனர். குறித்த பெண் வயது 47வயதும் இவர் ஏற்கனவே கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்தார் எனவும் தெரிய வருகின்றது.
இவரை விசாரனைகளின் பின்னர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வட்டிகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.