காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் இகலமுல்லவத்தை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது
காலி துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டுகொட தொடருந்து வீதியின் நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நேற்று (18) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.